னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். 3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...