முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்


இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். 

3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும்.

3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். 

5. திருவண்ணாமலை சாலை அருகே செல்லும்  பாலாற்றை சேலம் நகரில் செல்லும்  மணிமுத்தாறு போன்று சிமெண்ட் உபயோகித்து தண்ணீர் தேங்காத வண்ணம்... மழைக்காலத்துக்கு முன் செய்ய வேண்டும்.

6. நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் எல்லா விதமான நோயாளிகளையும் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் மேல் சிகிச்சை வேண்டுமெனில் மருத்துவமனை நிர்வாகமே அவர்களை கிருஷ்ணகிரி புதிய மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 

      கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல அனைவருக்கும் இலவச பேருந்து இயக்க வேண்டும். 

7. ஓசூர் நகரம் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் தொழில் நகரமாகும் நகரத்தில்  வாழும் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பும் குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்றும்  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில்  சுற்றியுள்ள காலியிடங்களில் உள்ள  சர்க்கார் முள் செடிகளை அகற்றி அந்த இடங்களை பாதுகாப்போடு இருப்பதை உறுதி செய்து நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்காத வண்ணமும் குப்பைகள் சேராத வகையில் பாதுகாத்து ஒரு ஆரோக்கிய நகரமாக வைக்க மாநகராட்சி, நகராட்சி

 நிர்வாகம் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் பள்ளிக்கட்டனகளுக்கு உரிய ரசீதுகள் கொடுக்க வேண்டும். 

9. மனித உரிமைக் கழகத்தின் 18 வது மாநாட்டை பாண்டிச்சேரியில் நடத்துவது என்பதை தலைவர், மனித உரிமை கழகதின் (பவுண்டேஷன்) நிறுவனர் டாக்டர் சி சுந்தர் எம் ஏ பி எல் அவர்களின் ஆலோசனை படி முடிவு செய்து மேற்படி மாநாட்டிற்கு அதிக உறுப்பினர்கள் செல்ல வேண்டும். 

10. 18.வது மானாட்டை சிறப்பாக நடத்துவதற்கு மாநில நிர்வாகிகள் அனைவரும் வெகு விரைவில் சென்னையில் கலந்து பேசி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்படுகிறது. 

 மேற்கண்ட திருமணங்கள் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.







இந்தக் கூட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை மனித உரிமை கழக புதிய உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்  .

நடந்த இந்த மனித உரிமை கழக ஆலோசனை கூட்டத்தில் குருஜி பாண்டியன் தேசிய துணை செயலாளர் முன்னிலையில் விஷ்வா பாரதி ரவி தர்மபுரி மாவட்ட தலைவர் அவர்கள் தலைமை தாங்கியும்,திரு அப்துல் மஜீத் தேசிய துணைத்தலைவர் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராகவும், கே செல்வம் சேலம் மாவட்ட தலைவர் அவர்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உடைய மகளிர் அணி தலைவி உஷா, மண்டல நிருபர் பிரவீன்,  பேராயர் தேவ கிருபாகரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் குணசேகரன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கல்பனா பாண்டியன்,சுபா  மாவட்ட இளைஞரணி நரேன்ராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் ஜெயவேலு பால் பிரகாஷ், பிரஸ் அசோக், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

        கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.   இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது    இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.    மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்   வடக்கு மாவ...