கழக செய்தி
கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் அவர்களின் இல்ல திருமண விழா
மனித உரிமைகள் கழகத்தின் 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
7.7.2025 அன்று பண்ருட்டி திருவதிகையில் நடைபெற்ற கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் இல்ல திருமண விழாவில்
மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர்/தேசிய தலைவர் டாக்டர் சுந்தர் அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி நிர்வாகிகளை சந்தித்து 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவது குறித்து கலந்துரையாடல் செய்தார். மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தேசியத் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களை புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜெ. தனாளன் மற்றும் பொருளாளர் கமல் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வடக்கு பகுதி மாநில செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மஞ்சினி அவர்கள் மனித உரிமை மீறல் குறித்து பேசினார் நகர செயலாளர் தியாகராஜன்,கிழக்கு மாநில செயலாளர் சுரேஷ்,மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பெரியசாமி மாநில புரவலர்கள் மூர்த்தி,தங்கராசு, அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரமேஷ், மற்றும் உறுப்பினர்கள் உத்ரகுமாரன், மணிவண்ணன், சண்முகம்,சிவா, ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் நடைபெறும் மாநாடு நோக்கம் குறித்தும் மாநாட்டு குழு அமைப்பு சம்பந்தமாகவும்தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
மேலும் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜெ. தனாளன் பிறந்தநாள் விழாவை தேசிய தலைவர் சுந்தர் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக கொண்டாடினர்கள்.
நிகழ்ச்சியை வடக்கு மாநில செயலாளர் மணிகண்டன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நகர செயலாளர். தியாகராஜன் நன்றி கூறி நிறைவு செய்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக