தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு முதல் கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி
மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 02-07-2025 புதன்கிழமை அன்று நடைபெற்ற மக்கள்
குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்,
மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், முன்னிலை வகித்தார். வடக்கு
மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்;
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இதற்கு பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுவருகிறது. வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை 679 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 675 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நம்முடைய முதலமைச்சர் ஆணைக்கிணங்க மூன்று ஆண்டுகளில் இதுவரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 997 சாலைகள் விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை சாலை, வடிகால் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறைப்படுத்தி வருகிறோம். வடக்கு மண்டல 5 வார்டுகளில் முதற்கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் குழாயில் ரீடிங் மோட்டார் பொருத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. விரைவில் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
பொதுமக்கள் குடி தண்ணீர் விநியோகம் செய்யும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக மின்மோட்டார் உபயோகித்து தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்த்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் மற்ற குடியிருப்புகளுக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும்.
பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்க்க மேயர் வேண்டுகோள்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் குப்பைகளை பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ததி உள்ளோம். மக்களிடம் கேட்டுக்கொள்வது கேரி பேக்குகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாட்டை 80 விழுக்காடு தடை செய்துள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டுசிறுசிறு கடைகளில் மக்கள் கேரி பேக்குகள் பயன் படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சியின் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் 563 தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். பின்னர் முகாமில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வாணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் தமிழ் செல்வன், நகர்நல அலுவலர் மருத்துவர் சரோஜா, நகர உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஸ்லின், சுப்புலட்சுமி, ஜெபஸ்டின் சுதா, காந்தி மணி, ரெங்கசாமி, தேவேந்திரன், கற்ப்பகக் கனி, மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, திமுக வட்டச் செயலாளர் சி.என்.ரவீந்திரன், இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவகுமார், பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்ட பிரதிநிதி மார்ஷல், உள்பட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக