நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சி புத்தக வாசிப்பில் உண்டானது தளர்ச்சி இந்த நிலைமாற்ற அரசு எடுத்த முயற்சி...தொடர்ந்து ஆண்டு தோறும் நாம் காணும் புத்தககண்காட்சி
அறிஞர்களின் சிறப்பான உரை - கலைநிகழ்ச்சிகள் - கவிஞர்களின் கருத்தாக்கம் - மாணவ மாணவியர்களிடம் புதிய உற்சாகத்தை. ஏற்படுத்துகிறது என்னும் உண்மை ஒருபுறமிருக்க...மாவட்டம்தோறும்- கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களும்- புத்தகங்களும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றிய சந்தேகங்கள் ஏற்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊர். இந்த ஊர் கல்வி- -விவசாயம் - வியாபாரம் இவற்றில் முன்னேறி வரும் பகுதியாகும். இந்த ஊரின் பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது தமிழக அரசு நூலகம்.
இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன் பெற்றோர் அனேகம் பேர். மேலும் இந்த நூலகத்தின் வாசகர்கள் அரசு பணிகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றி வருபவர்களும், பணி ஓய்வு பெற்று வந்தவர்களும் அனேகம்
இவ்வாறு பல சிறப்புகளுடன் மக்களுக்கு பயன்பட்டு வந்த ஏரல் பகுதியில்நூலகத்தின் இனறைய நிலையை இந்த கானணோளியில் பார்த்தால் தெரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக