முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்துல் கலாம் நினைவு நாள் : மனித உரிமை கழகம் சார்பாக மலர் தூவி மரியாதை

    நமது இந்திய திரு நாட்டின் முன்னால்; ஜனாதிபதி  அப்துல் கலாம் அவர்களின் 11வது  நினைவு நாளில் மனித உரிமை கழகத்தின்  நிறுவனர் தலைவர் டாக்டர் S.சுந்தர் அவர்களின்  அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் இணைந்து களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் அப்துல் கலாம் அவர்களின்  உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்  இதில் மாவட்ட நிர்வாகிகள் Mசங்கரன் S மாடசாமி M.நாகராஜன் N. முகம்மது முகைதீன் M.முகம்மது ரபீக் மணி ஜமால் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா கொடியேற்றம்

   தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா கொடியேற்றம் - 26-07-2025 சனிக்கிழமை அன்று காலை 8மணியலவில் நடைபெற்றது . இந்த விழாவில் கத்தோலிக்க  திரு சபை பங்கு மக்களும்.. பனி மய மாதா பக்தர்களும்- பொதுமக்களும்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்          

வாழ்த்துக்கள்

                                                                                                                                        பிறந்த நாள்   வாழ்த்துக்கள் நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர் 16வகையான செல்வங்களை பெற்று இன்புற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் தலைவர் மனித உரிமைகள் கழகம்    தலைவரை தொடர்ந்து... வாழ்த்தும்  மனித உரிமைகள் கழக சொந்தங்கள் நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள் பிறந்த நாளில் அன்னதானம் ‌வழங்கி சிறப்பிக்கப்பட்டது **************************...

விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான. திரு  இரா.மாடசாமி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட தலைவியாக திருமதி R.சங்கீதா ரமேஷ் துணைத்  தலைவியாக திருமதி நிர்மலா, வள்ளி மனேகரன் செயலாளராக திருமதி வேளாங்கண்ணி இணைச் செயலாளராக திருமதி இந்துமதி துணைச் செயலாளராக நஜீமி பீபி பொருளாளராக திருமதி R.சுந்தரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வுதியர்கள் சங்க துணை தலைவர் திருமதி ல. அல்போன்ஸ் வாழ்த்தி பேசினார்கள் இறுதியில் சங்க துணை தலைவி திருமதி M.வள்ளி நன்றி கூறினார் 🙏🏼

தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

  தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.     13-07-2025 ஞாயிற்று கிழமையன்று தூத்துக்குடி ஆயர் இல்ல இளையோர் அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அருட்தந்தை செல்வராசு தலைமை வகித்தார். பணி நிறைவு தமிழாசிரியர் புலவர் முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.  தூத்துக்குடி கவிஞர் நெல்லை தேவனின் 'வலிகளின் ஊர்வலம்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் அறம் வெளியிட,தமிழ்ச் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் பெற்றுக் கொண்டார். தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் மற்றும் திருச்சி எழுத்தாளர் ஏகரசி தினேஷ் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.      பணிநிறைவு ஆசிரியர் அல்பர்ட், பணி நிறைவு நெடுஞ்சாலைத்துறை கவிஞர் செல்வராஜ், பணிநிறைவு வங்கி மேலாளர் மாணிக்கவாசகம், இலக்கிய ஆர்வலர் லாரன்ஸ், தமிழ்...

ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கராத்தே கருப்பு பட்டைய தேர்வு

      தூத்துக்குடி   மாவட்டம் நாசரேத்தில்.. கராத்தே கருப்பு பட்டைய தேர்ச்சி போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக  கராத்தே கருப்பு  பட்டைய தேர்வு கடந்தபோட்டி கடந்த 13-07-2025 ஞாயிறு கிழமை  அன்று நடைபெற்றது.  ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக  நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி  கராத்தே கருப்பு பட்டயமும் சான்றிதழும் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பெரியதுரை, ஜான், மாஸ்டர் சபரி, குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

மனித உரிமைகள் கழகத்தின் "19ஆவது தேசிய மாநாடு"நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

  கழக செய்தி  கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் அவர்களின் இல்ல திருமண விழா    மனித உரிமைகள் கழகத்தின் 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  7.7.2025  அன்று  பண்ருட்டி திருவதிகையில் நடைபெற்ற கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் இல்ல திருமண விழாவில்   மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர்/தேசிய தலைவர் டாக்டர் சுந்தர் அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள்  கலந்து கொண்டு   மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.    பின்னர் மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி நிர்வாகிகளை  சந்தித்து 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவது குறித்து  கலந்துரையாடல் செய்தார். மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.            தேசியத் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களை புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜெ. தனாளன் மற்றும் பொருளாளர் கமல் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்ற...

சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கம்.

   சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கம். மனித உரிமைகள் கழகத்தின் கௌரவ ஆலோசகர் டாக்டர் எஸ்.அய்யாதுரை பாண்டியன் அவர்கள் இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கினார்.    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழக நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்; என் சந்திரசேகர்.  கல்லூரியின் துணைத் தலைவர் திருமதி அல்லிராணி அய்யாதுரை பாண்டியன் கல்லூரி முதல்வர் டாக்டர் பி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்   இவ்விழாவில் நமது கழக மாநில கமாண்டோ பிரிவு செயலாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி தலைவி இசக்கியம்மாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ் அருண் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்

தூத்துக்குடியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்; மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள  வார்டுகளுக்கு முதல் கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 02-07-2025 புதன்கிழமை அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்,  முன்னிலை வகித்தார். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார். முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்;                                                                        ...